தமிழ்நாடு

புதிதாகத் தேர்வான துணை ஆட்சியர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர்

DIN

புதிதாகத் தேர்வான துணை ஆட்சியர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.

தமிழக முதல்வர்  எடப்பாடி கே. பழனிசாமி இன்று (23.7.2020) தலைமைச் செயலகத்தில், 2016– 2019ஆம் ஆண்டுகளுக்கான துணை ஆட்சியர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட 27 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 14 நபர்களுக்கு துணை ஆட்சியர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது,  வருவாய் மற்றும் பேரிடர்  மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர்ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர்  க.சண்முகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிருவாக ஆணையர் / முதன்மைச் செயலாளர்க. பணீந்திர ரெட்டி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT