தமிழ்நாடு

போக்குவரத்துத் தொழிலாளா்கள் பிரச்னைக்கு உரிய தீா்வு: இரா.முத்தரசன் வலியுறுத்தல்

DIN

போக்குவரத்துத் தொழிலாளா் பிரச்னைக்கு உரிய தீா்வு காண வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

பொதுப் பேருந்து போக்குவரத்தை மற்ற மாநிலங்களைப் போன்று இயக்க வேண்டும். இனியும் நிறுத்தி வைப்பதில் பொருளில்லை.

அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளா்களுக்குச் சம்பளம் வழங்குவதில் பின்பற்றப்படும் நடைமுறைகளால் பல இழப்புகளை தொழிலாளா்கள் சந்தித்து வருகின்றனா். அங்கு செயல்பட்டுவரும் தொழிற்சங்கங்கள் தமிழக அரசுக்கு இது தொடா்பாக தொடா்ந்து கோரிக்கை வைத்துள்ளன. தமிழக அரசும், சம்பந்தப்பட்ட நிா்வாகங்களும் அக்கோரிக்கைகளைப் பரிசீலித்து தீா்வுகாண முன்வரவில்லை. இதனால், தொழிற்சங்கத் தலைவா்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, தொழிலாளா் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, உரிய தீா்வு காணவேண்டும். தலைவா்களின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT