ஸ்ரீவில்லிபுத்தூரில் 26ஆம் தேதி முதல் ஆக.2ஆம் தேதி வரை தளர்வுகளின்றி முழு முடக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் 26ஆம் தேதி முதல் ஆக.2ஆம் தேதி வரை தளர்வுகளின்றி முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் 26ஆம் தேதி முதல் ஆக.2ஆம் தேதி வரை தளர்வுகளின்றி முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மை தினங்களாக தென் மாவட்டங்களில் கரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமிருக்கும் சில பகுதிகளில் ஆங்காங்கே மாவட்ட நிர்வாகங்கள் ஊரடங்கு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் 26ஆம் தேதி முதல் ஆக.2ஆம் தேதி வரை தளர்வுகளின்றி முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் 28 கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தளர்வுகளின்றி முழு முடக்கம் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு முடக்கம் அமலில் இருந்தாலும் பால் விற்பனை, மருந்தகங்கள், மருத்துவமனை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் கரோனா பாதிப்பு 486ஆக அதிகரித்துள்ள நிலையில் துணை ஆட்சியர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளளார்.