தமிழ்நாடு

ஊழியருக்கு கரோனா: கரியாப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியர் ஒருவருக்கு  கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மருத்துவமனை புதன்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட்டது.

கரியாப்பட்டினம்  பகுதியில் கடந்த இரு வாரங்களில் 5 பேருக்கு கரோனா தொற்று  உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை தொடங்கி 4 நாள்களாக அந்த பகுதியில் மூடப்பட்டிருந்த கடைகள் திங்கள்கிழமை முதல் திறக்கப்பட்டது.

இதனிடையே, கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒருவருக்கு, இரண்டாவது முறையாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை எனத் தெரியவந்தது. ஆனாலும், திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், திங்கள்கிழமை உயிரிழந்தார்.

இந்த நிலையில், கரியாப்பட்டினம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பணியாளர் ஒருவருக்கு புதன்கிழமை தொற்று உறுதியானது. இதையடுத்து, மருத்துவமனை மூடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடல் கன்னி.. மானுஷி சில்லர்!

கோவையில் சோகம்: மின்சாரம் பாய்ந்து சிறுவன், சிறுமி பலி

ஹரியாணா: பஸ் விபத்தில் 7 பேர் பலி

7 நாள்களுக்கு பின் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ஸ்ரீவரத சஞ்சீவிராய பெருமாள் கோயிலில் கருட சேவை

SCROLL FOR NEXT