தமிழ்நாடு

ஐக்கிய அரபு அமீரக அரசின் சார்பில் 186 பயணிகள் மதுரை விமான நிலையம் வந்தனர்

DIN

ஐக்கிய அரபு அமீரக அரசின் சார்பில் ராஸ் அல் கைமா பகுதியிலிருந்து வியாழக்கிழமை அதிகாலை 186 பயணிகள் மதுரை விமான நிலையம் வந்தனர்.

கரோனா பொது முடக்கம் காரணமாக வெளிநாடுகளில் வேலை இழப்பை சந்தித்து வந்த தொழிலாளர்களை மீட்கும் விதத்தில் மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தை கொண்டு வந்தது. அதன் பேரில் ஐக்கிய அரபு அமீரக பகுதியில் இருந்த தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் வியாழக்கிழமை அதிகாலை மதுரை வந்தடைந்தனர்.

பயணிகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து தென் மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் சிறப்பு பேருந்துகள் மூலம் அவரவர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பயணிகள் தனியார் விடுதி மற்றும் கரோனா சிறப்பு பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT