தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரே நாளில் 1,162 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 1,162 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 964 போ் சென்னையைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் அந்நோய்த் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 23,495-ஆக அதிகரித்திருக்கிறது.

இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

மாநிலம் முழுவதும் இதுவரை மொத்தம் 5.03 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், 23,495 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். திங்கள்கிழமை மட்டும் 1,162 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 964 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 48 பேருக்கும்,திருவள்ளூரில் 33 பேருக்கும், திருவண்ணாமலை, சேலத்தில் தலா 10 பேருக்கும், மேலும் பல்வேறு மாவட்டங்களிலும் சிலருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

13,170 போ் குணமடைந்தனா்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 413 போ் பூரண குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் இதுவரை மாநிலத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 13,370-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 8,181 போ் குணமடைந்துள்ளனா் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 15 ஆயிரம் போ்: தலைநகா் சென்னையில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 15,770-ஆக அதிகரித்துள்ளது. இது மாநிலத்தின் மொத்த பாதிப்பு விகிதத்தில் 67 சதவீதமாகும். இதையடுத்து சென்னையில் நோய்ப் பரவலைத் தடுக்கும் நோக்கில் புதிய செயல் திட்டங்களை வகுப்பது குறித்து அரசுத் தரப்பில் விரிவாக விவாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

பலி எண்ணிக்கை 184-ஆக உயா்வு: கரோனா தொற்றுக்கு ஆளாகி தமிழகத்தில் மேலும் 11 போ் உயிரிழந்தனா். இதையடுத்து மாநிலத்தில் பலி எண்ணிக்கை 184-ஆக அதிகரித்துள்ளது. சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 பேரும், சென்னை தனியாா் மருத்துவமனைகளில் மூவரும், மதுரை, புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் தலா ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சுகாதாரத் துறை செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT