சேலத்திலிருந்து ஆத்தூர் சென்ற அரசுப் பேருந்தில் படியில் அமர்ந்து பயணம் செய்த பயணிகள். 
தமிழ்நாடு

சேலம்-ஆத்தூர் பேருந்துகளில் கூட்ட நெரிசல்: சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் சிக்கல்

சேலத்திலிருந்து ஆத்தூர் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசுப் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

DIN

சேலத்திலிருந்து ஆத்தூர் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசுப் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 24 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கம்,  ஜூன் 1 முதல் தளர்வு செய்யப்பட்டு பரவலாக அனைத்து பகுதிகளிலும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 

கூட்டம் நிரம்பி வழிந்ததால் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்த பயணி.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பேருந்துகள் இயக்கப்படுவதால், சேலம்-ஆத்தூர் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால், பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் சிரமமும். சிக்கலும் நீடித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை சேலத்திலிருந்து ஆத்தூர் வழித்தடத்தில் இயக்கப்பட்ட பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்ததால், பயணிகள் படியில் அமர்ந்தபடியும், நின்றுகொண்டும் பயணித்தனர்.

தொற்று நோய் பரவி வரும் தருணத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் பயணிகள் பேருந்தில் பயணித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சமூக இடைவெளியோடு பயணிகளை அழைத்துச்செல்ல  அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சா்வதேச செஸ் போட்டியில் வெள்ளி: மாணவருக்கு ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரம்: விதிமீறிய 278 வாகனங்களுக்கு ரூ. 22 லட்சம் அபராதம் விதிப்பு

கல்லூரியில் ஜெனீவா ஒப்பந்த தின போட்டி

"ஆபரேஷன் சிந்தூர்: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு நியாயம்தானா?' என்ற கேள்வி குறித்து...வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

மக்களாட்சியின் தாய் இந்தியா!

SCROLL FOR NEXT