முகப்பு
தமிழ்நாடு

ஆத்தூர் நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து

ஆத்தூர் நகராட்சி குப்பைக் கிடங்கில் இன்று தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தமிழ்நாடு

ஆத்தூர் நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து

ஆத்தூர் நகராட்சி குப்பைக் கிடங்கில் இன்று தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:44 PM
பகிர்:

ஆத்தூர் நகராட்சி குப்பைக் கிடங்கில் இன்று தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு தென்னங்குடிபாளையம் ஊராட்சியில் இருக்கிறது. இங்கு குப்பைக் கிடங்கிலிருந்து உரம் தயாரித்து விற்பனை செய்தும் வருகின்றனர்.

இந்தக் குப்பைக் கிடங்கில் அடிக்கடி மர்ம நபர்கள் தீ வைத்து விடுகின்றனர். இந்நிலையில் தற்போது குப்பைக் கிடங்கில் தீ பற்றி எரிகிறது. இது குறித்து ஆத்தூர் தீயணைப்பு அலுவலர் பெ.சேகர் தலைமையிலான வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →