தமிழ்நாடு

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக் காலம் நீட்டிப்பு

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

DIN


புது தில்லி: தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக தலைமைச் செயலாளராக இருக்கும் சண்முகத்தின் பதவிக் காலம் வரும் ஜூலை மாத இறுதியில் முடிவடைய இருந்தது. இதற்கிடையே, சண்முகத்தின் பதவிக் காலத்தை நீட்டிக்குமாறு தமிழக அரசு வைத்த கோரிக்கையை ஏற்று, அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சண்முகத்தின் பதவிக் காலத்தை ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழக தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துடரும் கூட்டணி! புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் மோகன் லால்!

முதல் டி20: ஆடம் ஸாம்பா அபார பந்துவீச்சு; ஆஸி.க்கு 169 ரன்கள் இலக்கு!

ஆன்லைனில் இந்த தயாரிப்புகளை வாங்க வேண்டாம்!

மத்திய பட்ஜெட்! அதிக முறை தாக்கல் செய்தவரும் மிகச் சிறிய பட்ஜெட்டும்!

முன்னாள் பிரதமரை நேரில் சந்தித்த மோடி!

SCROLL FOR NEXT