தமிழ்நாடு

கணவர் இறந்த சோகம்: நினைவு நாளில் மனைவி, மகன் தற்கொலை

கடலூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் அவரது மனைவி மற்றும் மகன் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

கடலூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் அவரது மனைவி மற்றும் மகன் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் கோண்டூர் சாய்பாபா நகரைச் சேர்ந்தவர் முத்து ரெட்டியார் (67). இவர் கடந்த 3-6-2019 அன்று உடல் நிலை சரியில்லாமல் இறந்தார். இந்நிலையில் அவரது திதிக்கான ஏற்பாட்டினை அவரது மனைவி லதா (61), மகன் சேதுராமன் (26) ஆகியோர் செய்து வந்தனர். 

இன்று திதி வழங்க இருந்த நாளில் அவர்கள் இருவரும் வீட்டில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து இறந்த நிலையில் கிடந்தனர். இதனைக்கண்ட வீட்டின் உரிமையாளர் கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறை இருவரது சடலங்களையும் மீட்டு, கடலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். 

கணவர் இறந்த நாளிலிருந்து குடும்பத்தினர் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் அதனால் அவரது நினைவு நாளில் இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.87.53 ஆக நிறைவு!

கேஷுவல் லுக்.. ஈஷா ரெப்பா!

வாத்தி படத்துக்காக ஜி.வி. பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது!

முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

தேசிய திரைப்பட விருதுகள்! சிறந்த தமிழ்ப்படம் உள்பட 3 விருதுகளுடன் பார்க்கிங் அசத்தல்!

SCROLL FOR NEXT