தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,685 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் இன்று (செவ்வாய்கிழமை) புதிதாக 1,685 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


தமிழகத்தில் இன்று (செவ்வாய்கிழமை) புதிதாக 1,685 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, தமிழகத்தில் புதிதாக 1,685 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் அதிகபட்சமாக இன்று 1,243 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டோர் 1,649. வெளி நாடுகள் மற்றும் பிறமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டோர் 36.

இன்று மேலும் 21 பேர் பலியாகியுள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் பலியானோர் 6 பேர், அரசு மருத்துவமனையில் பலியானோர் 15 பேர். இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம், இன்று ஒரேநாளில் 798 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 18,325 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று மட்டும் 13,219 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 6,21,171 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இன்றைய தேதியில் தனிமையில் இருப்பவர்கள் உள்பட மொத்தம் 16,279 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வர் தலைமையில் அண்ணா நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி!

மருத்துவ இடங்களை அதிகரிக்க விண்ணப்பிக்க வாய்ப்பு: என்எம்சி

மருத்துவ மாணவிக்கு உயிா் காக்கும் உயா் நரம்பியல் சிகிச்சை: சாத்தியமாக்கிய அரசு மருத்துவா்கள்

‘இந்திராகாந்தி பெயரை பரிசீலினை செய்வதாக முதல்வா் வாக்குறுதி’

தன்னிறைவு பெற்ற முன்மாதிரி தொகுதியாக கொளத்தூரை மேம்படுத்தும் திட்டங்கள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

SCROLL FOR NEXT