தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயங்கும்

DIN

தமிழகத்தில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயங்கும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 5 ஆம் கட்ட பொது முடக்கம் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் கரோனா அல்லாத பகுதிகளில் மத்திய, மாநில அரசுகள் தளர்வுகளை அறிவித்து வருகிறது. 

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பல தளர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. இங்கு 50% அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், தமிழகத்தில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயங்கும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயங்கும் என்றும் குறிப்பிட்ட மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் 4,400 தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் தர்மராஜ் தெரிவித்தார். 

பேருந்துகளில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, பயணிகள் முகக்கவசம் அணிய வலியுறுத்தல் உள்ளிட்ட அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படும் என்றும் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைக்கால ஜாமீன்: போதிய விளக்கத்தை அளிக்க ஹேமந்த் சோரனுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

மம்தா மீது அவதூறு: பாஜக வேட்பாளா் பிரசாரம் செய்ய தோ்தல் ஆணையம் ஒருநாள் தடை

விண்வெளி கருந்துளையில் உயா் ஆற்றல் எக்ஸ்-ரே சீரற்ற நிலையில் வெளியேற்றம்: ஆய்வில் கண்டுபிடிப்பு

எதிரியால் பாராட்டப்பட்ட ராகுல் நாட்டை ஆள அனுமதிக்கலாமா?

மடவாா் வளாகம் கோயிலில் ஜூன் 2- இல் குடமுழுக்கு

SCROLL FOR NEXT