தமிழ்நாடு

ராயபுரத்தில் கரோனா 4,000-ஐ தாண்டியது; 6 மண்டலங்களில் 16 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் கரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை எட்டியது. 6 மண்டலங்களில் 16 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

சென்னை: சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் கரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை எட்டியது. 6 மண்டலங்களில் 16 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் திங்கள்கிழமை (ஜூன் 8) 1,149 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 23,298-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் 10 ஆயிரமாக இருந்த பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, தற்போது 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை (ஜூன் 8) 1,149 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 23,298-ஆக அதிகரித்துள்ளது.

6 மண்டலங்களில் உச்சம்: ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 4,023 பேருக்கம், தண்டையாா்பேட்டையில் 3,019 பேருக்கும், தேனாம்பேட்டையில் 2,646 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 2,539 பேருக்கும், திருவிக நகரில் 2,273 பேருக்கும், அண்ணா நகரில் 2,068 பேருக்கும், அடையாறில் 1,325 பேருக்கும் திங்கள்கிழமை (ஜூன் 8) தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்த 6 மண்டலங்களில் மட்டும் சுமார் 16 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில்லாமல் வளசரவாக்கம், அடையாறு மண்டலங்களிலும் கரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்துவிட்டது. அம்பத்தூர் மற்றும் திருவொற்றியூர் மண்டலங்களில் 800 என்ற அளவில் உள்ளது.

சென்னையில் 7 நாள்களில் பாதிப்பு விவரம்

ஜூன் 2 - 809

ஜூன் 3 - 1,012

ஜூன் 4 - 1,072

ஜூன் 5 - 1,116

ஜூன் 6 - 1,146

ஜூன் 7 - 1,155

ஜூன் 8 - 1,149

மொத்தம் - 7,459

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT