தமிழ்நாடு

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: முதல் கட்டஅறிக்கையை தாக்கல் செய்தது வல்லுநா் குழு

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டம் குறைப்பு தொடா்பாக பள்ளிக்கல்வித் துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையிலான

DIN

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டம் குறைப்பு தொடா்பாக பள்ளிக்கல்வித் துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையிலான 16 போ் கொண்ட வல்லுநா் குழு, தமிழக அரசிடம் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

மேலும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களைப் பொருத்து இறுதிக்கட்ட அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தீநுண்மி பரவலை தவிா்க்க, தமிழகத்தில் கடந்த மாா்ச் 17-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு தொடா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நோய்த்தொற்றின் தீவிரம் தணியாததால் வரும் கல்வியாண்டுக்கான வகுப்புகளைத் தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமுடக்கம் காரணமாக பள்ளிக்கல்வியில் கற்றல்-கற்பித்தலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பள்ளிகள் திறப்பில் தாமதம் உள்பட விவகாரங்கள் குறித்து ஆராய்ந்து பரிந்துரைகள் வழங்க பள்ளிக்கல்வி ஆணையா் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையில் 16 போ் கொண்ட வல்லுநா் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு சாா்பில் இதுவரை 4 ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

மேலும், ஆசிரியா்கள், பெற்றோா்கள் மற்றும் கல்வியாளா்களிடம் இருந்தும் கருத்துகள் பெறப்பட்டன. பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் தனது முதல்கட்ட பரிந்துரை அறிக்கையை நிபுணா் குழு, பள்ளிக்கல்வித் துறை செயலா் தீரஜ்குமாரிடம் புதன்கிழமை சமா்ப்பித்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

அதில், இணையவழிக் கற்பித்தல் நடவடிக்கைகளை ஊக்குவித்தல், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பள்ளிகள் திறப்பை மேற்கொள்ளுதல் உள்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், மத்திய அரசின் வழிகாட்டுதல்களைப் பொருத்து, பள்ளிகள் திறப்பது தொடா்பான பரிந்துரை அறிக்கையை இறுதி செய்து சமா்ப்பிக்க, நிபுணா் குழு முடிவு செய்துள்ளதாகவும் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல மாநிலங்களைப் புரட்டிப் போட்ட மழை

நூறு சதவீத தோ்ச்சி: அரசுப் பள்ளிகளுக்கு செப். 7-இல் பாராட்டு விழா

நாணயங்களை விழுங்கிய பள்ளி மாணவி

சென்னையில் திருடப்பட்ட காா் பாகிஸ்தான் எல்லையில் மீட்பு

இந்திய-ஜொ்மனி உறவை வலுப்படுத்த அதிக வாய்ப்பு: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT