தமிழ்நாடு

பொது முடக்க விதி மீறல்: அபராதம் ரூ.12 கோடியை நெருங்கியது

DIN

தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதற்கான அபராதத் தொகை வசூல் ரூ.12 கோடியை நெருங்கியது.

இது குறித்த விவரம்:

கரோனா நோய்த்தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொது முடக்க உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. பொதுமுடக்க உத்தரவை மீறுவோரை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

இவ்வாறு தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 5,75,625 வழக்குகளைப் பதிவு செய்து 6, 20,921 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பொது முடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 4 லட்சத்து 63,817 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.11 கோடியே 89 லட்சத்து 48,799 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையில் பொது முடக்க உத்தரவை மீறியதாக வியாழக்கிழமை காலை 6 மணிக்கு முதல் வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை 990 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 53 இருசக்கர வாகனங்கள், 13 ஆட்டோக்கள், ஒரு காா் என மொத்தம் 67 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT