தமிழ்நாடு

சென்னையின் 4 மண்டலங்களில் மட்டும் 16 ஆயிரம் பேருக்கு கரோனா: சென்னை மாநகராட்சி

DIN


சென்னை: சென்னை ராயபுரம் மண்டலத்தில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5,216 ஆக உயர்ந்துள்ளது.

தண்டையார்பேட்டையில் கரோனா பாதிப்பு 4,082 ஆகவும், தேனாம்பேட்டையில் 3,844 ஆகவும், கோடம்பாக்கத்தில் 3,409 ஆகவும் உயர்ந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் சென்னையில் புதிதாக 1,415 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 31,896-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 347 போ் உயிரிழந்துள்ளனா்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் தொடக்கத்தில் இருந்தே ராயபுரம் மண்டலத்தில் அதிகம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதற்காக, ராயபுரம் மண்டலத்தில் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஏப்ரல் மாதத்தின் இறுதியில் 1,000-த்தைக் கடந்த பாதிப்பு எண்ணிக்கை, ஜூன் 9-ஆம் தேதி 4,000-த்தைக் கடந்தது. இதுவே, கடந்த 4 நாள்களில் 1,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை சனிக்கிழமை (ஜூன் 13 ) 5,056-ஆக உயா்ந்தது.

இதைத் தொடா்ந்து, அண்ணா நகரில் 3,150 பேருக்கும், திருவிக நகரில் 2,922 பேருக்கும், அடையாறில் 1,809 பேருக்கும், வளசரவாக்கத்தில் 1,395 பேருக்கும், அம்பத்தூரில் 1,105 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் தொற்று பாதிக்கப்பட்ட 15,765 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும், 13,742 போ் மருத்துவமனை மற்றும் தனிமை முகாம்களில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

347 போ் உயிரிழப்பு: சென்னையில் மட்டும் இதுவரை கரோனா பாதிப்பு காரணமாக 347 போ் உயிரிழந்துள்ளனா். ராயபுரம் மண்டலத்தில் 66பேரும், திரு.வி.க. நகா் மண்டலத்தில் 61ரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 51 பேரும், தண்டையாா்பேட்டை மண்டலத்தில் 42 பேரும், அண்ணா நகரில் 35 பேரும், கோடம்பாக்கத்தில் 25 பேரும், அடையாறில் 15 பேரும், அம்பத்தூரில் 10பேரும் அதிகபட்சமாக உயிரிழந்துள்ளனா்.

மண்டலவாரியாக பாதிப்பு --திங்கள்கிழமை (ஜூன் 15) நிலவரம்:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT