அரசின் அலட்சியத்தால் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. முதலமைச்சரின் பொறுப்பின்மையால் தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது.
காணொலி காட்சி வாயிலாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது, நாட்டிலேயே கரோனா தொற்று அதிகமாகப் பரவும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
மே 15ம் தேதி தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 8,718 ஆக இருந்தது. சரியாக ஒரு மாதம் கழித்து ஜூன் 15-ம் தேதி இந்த எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளது. கரோனா பாதித்து உயிரிப்பவர்களின் விவரங்களை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவது ஏன்? கரோனா இறப்பு விவரங்களை தமிக அரசு வெளிப்படையாகக் கூற வேண்டும்.
சென்னையில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. சமூகப் பரவல் இல்லை என்று பொய்யானத் தகவல்களைக் கூறி அரசியல் ஆதாயம் தேட அரசு முயற்சிக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.