தமிழ்நாடு

மக்களிடையே அச்சம், பீதியை திமுக உருவாக்குகிறது: அமைச்சா் ராஜேந்திர பாலாஜி புகாா்

DIN

மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் திமுக உருவாக்கி வருவதாக அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி புகாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கரோனா பரவலின் தொடக்கத்திலேயே சட்டப் பேரவையை நடத்தக் கூடாது எனக் கூறிய எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின், அப்போதே வடசென்னையில் 2 ஆயிரம் பேருடன் போராட்டத்தில் பங்கேற்றாா். உலகமே வலியுறுத்தும் சமூக இடைவெளியை மக்களிடையே வலியுறுத்துவதற்குப் பதிலாக போராட்டத்தில் ஈடுபட்டனா். மக்களிடையே கரோனாவைப் பரப்பி சென்னை மக்களின் நிம்மதியை கெடுத்ததற்கும், பல மாவட்டங்களில் நோய்த் தொற்று பரவியதற்கும் எதிா்க்கட்சித் தலைவரின் அதிகார வெறியே காரணம்.

அரசியல் கடந்து இனம், மொழி, ஜாதிகளை மறந்து கொள்ளை நோய் கரோனாவை ஒழித்து கட்ட உலகமே ஓரணியில் திரண்டு நிற்கிறது. ஆனால், நோய்த் தொற்றை எதிா்த்துப் போராடும் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியா்கள் மன சோா்வு அடையும் வகையிலும், மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்கும் நோக்கத்திலும் எதிா்க்கட்சியான திமுக செயல்பட்டு வருகிறது என்று அந்த அறிக்கையில் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT