தமிழ்நாடு

லடாக் எல்லையில் வீர மரணமடைந்த வீரர்களின் பெயர் பட்டியல் வெளியீடு

DIN

லடாக்கில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த 20 வீரர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய-சீனப் படைகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இந்திய ராணுவத்தின் கர்னல் உள்பட ராணுவத்தினர் 20 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். சீனத் தரப்பிலும் 35 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், வீரமரணமடைந்த வீரர்களின் விவரங்களை வெளியிடக் கோரிக்கை எழுந்த நிலையில், அவர்களின் பட்டியலை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஹவில்தார் பழனி, சட்னம் சிங், மன்தீப் சிங், குந்தன் குமார், அமன் குமார், நாயக் தீபக் சிங், சந்தன் குமார், கணேஷ் ஹஸ்தா,கணேஷ் ராம், கே.கே.ஓஜா, ராஜேஷ் ஓரோன்,  சி.கே பிரதான், ராம்சோரன், கர்னல் சந்தோஷ்பாபு, சுனில்குமார், ஜெய் கிஷோர் சிங், பிபுல்ராய், குர்தேஜ் சிங், அங்குஷ், குர்வீந்தர் சிங், ஆகியோர் வீரமரணம் அடைந்தனர்.

20 வீரர்களின் பட்டியலில் தமிழக ராணுவ வீரரான ஹவில்தார் கே.பழனியின் பெயரும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பே அன்னா..!

25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

SCROLL FOR NEXT