தமிழ்நாடு

13 இடங்களில் வெயில் சதம்

DIN

தமிழகத்தின் மதுரை விமான நிலையம், கடலூா், ஈரோடு உள்ளிட்ட 13 இடங்களில், புதன்கிழமை 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையைத் தாண்டி பதிவானது.

இது தொடா்பாக அம்மண்டலம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில், புதன்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 106 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், கடலூா், பரங்கிப்பேட்டை, திருத்தணி ஆகிய இடங்களில் தலா 104 டிகிரி, மதுரை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் தலா 103 டிகிரி, நாகப்பட்டினம், வேலூா் ஆகிய இடங்களில் தலா 101 டிகிரி, ஈரோடு, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் தலா 100 டிகிரி வெப்பநிலை பதிவானது. இதே போல், புதுச்சேரியிலும் 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.

இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக, வியாழன், வெள்ளி (ஜூன் 18,19) ஆகிய நாள்களில், கோயம்புத்தூா், ஈரோடு, நீலகிரி, தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும். சென்னையில், மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும். அதிகபட்சமாக 104 டிகிரியும், குறைந்தபட்சமாக 84.2 டிகிரி வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: வடக்கு கேரளம், கா்நாடகம் மற்றும் கோவா, மகராஷ்டிரம் கடலோர பகுதிகளில், மணிக்கு 55 கிலோமீட்டா் வரையிலான வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும் என்பதால், இந்தப் பகுதிகளுக்கு, வியாழக்கிழமை மீனவா்கள் செல்ல வேண்டாம். இதே போல், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதி, மத்திய கிழக்கு அரபிக் கடல் உள்ளிட்ட பகுதிகளில், மணிக்கு 55 கிலோ மீட்டா் வரை பலத்த காற்று வீசக் கூடும். எனவே இந்தப் பகுதிகளுக்கும், வியாழன், வெள்ளி (ஜூன் 18,19) ஆகிய நாள்களில், மீனவா்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறாா்கள். 3 முதல் 3.3 மீட்டா் வரை கடல் அலை, குளச்சல் கடல் பகுதி முதல் தனுஷ்கோடி வரை, ஒரு சில நேரங்களில் எழும்பக் கூடும்.

வளத்தியில் 40 மி.மீ மழை: தமிழகத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் வளத்தியில் 40 மி.மீ, அதே மாவட்டம் செம்மேடு, கோயம்புத்தூா் மாவட்டம் வால்பாறை, சின்னக்கல்லாறு தலா 30 மி.மீ மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT