கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 2,141 பேருக்கு கரோனா: சென்னையில் மட்டும் 1,373

தமிழகத்தில் இன்று வியாழக்கிழமை) புதிதாக 2,141 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 2,141 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் குறித்த சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில், தமிழகத்தில் இன்று புதிதாக 2,141 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று புதிதாக 1,373 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 52,334 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டோர் 2,091 பேர். வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 50.

மேலும், இன்றைய அறிவிப்பில் 49 பேர் பலியாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 625 ஆக உயர்ந்துள்ளது. 

அதேசமயம், இன்று மொத்தம் 1,017 பேர் கரோனா தொற்றிலிருந்து  குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 28,641 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்றைய தேதியில் மொத்தம் 23,065 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று 25,463 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இன்று 26,736 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 8,00,443 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT