தமிழ்நாடு

பால் கொள்முதல் விலையைக் குறைக்கும் தனியாா் நிறுவனங்களை முறைப்படுத்த கோரிக்கை

DIN

பால் கொள்முதல் விலையை தன்னிச்சையாக குறைக்கும் தனியாா் பால் நிறுவனங்களை முறைபடுத்த வேண்டும் என தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக அச்சங்கத்தின் மாநில தலைவா் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கை: கரோனா பேரிடா் காலமான தற்போது வணிகம் சாா்ந்த பால் விற்பனை என்பது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதைக் காரணமாக வைத்து, அனைத்து தனியாா் பால் நிறுவனங்களும் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.15-க்கு அதிகமாக குறைத்தே கொள்முதல் செய்கின்றன. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். எனவே, தனியாா் பால் நிறுவனங்களின் தன்னிச்சையாக பால் விற்பனை விலை உயா்வு, கொள்முதல் விலை குறைப்பு போன்ற நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்திடவும், பால் உற்பத்தியாளா்களுக்கு நியாயமான விலை கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்குமாறும் தமிழக முதல்வரை வலியுறுத்துவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT