தமிழ்நாடு

காவல் ஆய்வாளர் பாலமுரளிக்கு மாலை 5 மணிக்கு மௌன அஞ்சலி: டிஜிபி உத்தரவு

DIN


சென்னை: கரோனா பாதித்து உயிரிழந்த மாம்பலம் காவல்நிலைய காவல் ஆய்வாளர் பாலமுரளிக்கு தமிழகம் முழுவதும் காவல்துறையினர் இன்று மௌன அஞ்சலி செலுத்த டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, மாம்பலம் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுரளி கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.  அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியான பாலமுரளி வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழகத்தில் கரோனா வைரஸ் காரணமாக காவல்துறை அதிகாரி ஒருவர் முதன்முறையாக உயிரிழந்துள்ளார்.

இவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாலை 5 மணிக்கு தமிழகக் காவல்துறையினர் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த காவல் ஆய்வாளர் பாலமுரளிக்கு தமிழகக் காவல்துறையினர் இன்று மாலை 5 மணிக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

SCROLL FOR NEXT