தமிழ்நாடு

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ரத்து

DIN

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் அனைத்து ஆண்டுப் பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக், இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்துத் தேர்வுகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

இறுதியாண்டு மாணவர்களுக்கு முந்தைய பருவத் தேர்வின் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும் எனறும், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் அனைத்து ஆண்டுப் பருவ தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழக முதுகலை இறுதியாண்டு மாணவா்களுக்கு அறிவிக்கப்பட்ட ஆன்லைன் தோ்வுகளுக்கு மாணவா்கள் தரப்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகம், முதுகலை இறுதியாண்டு மாணவா்களுக்கு ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆன்லைன் தோ்வுகள் நடத்தப்படும் என அறிவித்திருந்தது.

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் பயிலும் பெரும்பாலான மாணவா்கள் கேரளத்தைச் சோ்ந்தவா்கள். அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் வசிப்பவா்கள். இதனால், இணையதள வசதி கிடைப்பது மிகவும் அரிது.

அத்துடன் பாடத் திட்டங்கள் இன்னமும் முடிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதுதவிர, மத்தியப் பல்கலைக்கழகம் தனியாா் முகமை மூலம் தோ்வு நடத்த முயற்சிப்பதாகவும் மாணவா்கள் குற்றம்சாட்டிருந்தனர்.

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம், ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகம் போன்ற பல்வேறு நிலையங்கள் தோ்வு நடத்தாமல் அக மதிப்பீடு மதிப்பெண் போன்ற காரணிகளைக் கொண்டு மாணவா்களின் இறுதித் தோ்வு மதிப்பை வெளியிடுவதாகக் கூறப்படுகிறது.

ஆன்லைன் தோ்வை ரத்து செய்துவிட்டு மற்ற பல்கலைக்கழகங்களைப் போல அக மதிப்பீடு உள்ளிட்ட காரணிகளைக் கொண்டு தோ்வு மதிப்பெண்ணை வெளியிட வேண்டும் என மாணவா்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT