திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா பரிசோதனை 
தமிழ்நாடு

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 174 பேருக்கு கரோனா தொற்று

திருவள்ளூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி மேலும் 174 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

DIN

திருவள்ளூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி மேலும் 174 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகளவில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை ஒட்டியுள்ள மண்டலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர், பூவிருந்தமல்லி, ஆவடி, திருவேற்காடு உள்ளிட்ட இடங்களில் தொற்று அதிகமாகப் பதிவாகியுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 174 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நேற்று வரை கரோனா பாதிப்பு 2,376 ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக 174 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 2,819 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நபோ​லியை வீ‌ழ்‌த்​தி​யது மா‌ன்​செஸ்​ட‌ர் சி‌ட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை

காயம் ஆறிவிடவில்லை!

காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறத்தான் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது

இணைய வரன்களில் எச்சரிக்கை!

இயந்திரங்களால் ஆனது உலகு!

SCROLL FOR NEXT