மாநில மனித உரிமைகள் ஆணையம் 
தமிழ்நாடு

சிறையில் தந்தை, மகன் மரணம்: தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை, மகன் மரணமடைந்தது  தொடர்பாக தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

DIN

சென்னை: கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை, மகன் மரணமடைந்தது  தொடர்பாக தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த தந்தை - மகன் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இருவரின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. 

இந்நிலையில் உயிரிழந்த ஜெயராஜின்  மனைவி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தனது கணவர் ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸின் உடலை மருத்துவர்கள் குழு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த நீதிபதி புகழேந்தி, 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார் மேலும். பிரேத பரிசோதனையை விடியோவாக பதிவு செய்யப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

அதில் தமிழக அரசின் முதன்மைச் செயலாளர், சிறைத்துறை ஏடிஜிபி ஆகிய இருவரும் இந்த சம்பவம் தொடர்பாக  4 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

SCROLL FOR NEXT