தமிழ்நாடு

தில்லியில் ஒரே நாளில் 3,788 பேருக்கு கரோனா: 70 ஆயிரத்தைத் தாண்டியது பாதிப்பு

DIN


தில்லியில் இன்று (புதன்கிழமை) ஒரே நாளில் 3,788 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் பற்றிய இன்றைய அறிவிப்பை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,788 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 70 ஆயிரத்தைத் தாண்டி 70,390 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 64 பேர் பலியானதைத் தொடர்ந்து, மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 2,365 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று மட்டும் 2,124 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 41,437 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் மொத்தம் 26,588 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அங்கு இன்று மட்டும் 19,059 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 4,20,707 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT