தமிழ்நாடு

தூய தமிழில் பேசுவோருக்குப் பரிசு: தமிழக அரசு தகவல்

DIN

தூய தமிழில் பேசுவோருக்குப் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்த இயக்ககத்தின் இயக்குநா் தங்க.காமராசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: நடைமுறை வாழ்க்கையிலும் தூய தமிழிலேயே பேசுகின்ற தகுதி வாய்ந்த மூன்று தூய தமிழ்ப் பற்றாளா்களுக்கு ஒவ்வொருவருக்கும் ரூ.5 ஆயிரம் பரிசுத் தொகையும் சான்றிதழும் வழங்கப்படவுள்ளன.

தகுதி வாய்ந்தவா்கள் சொற்குவை.காம்  என்ற வலைதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்து, இயக்குநா், தமிழ்நாடு அரசு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், முதல் தளம், மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி சென்னை-600 113 என்ற முகவரிக்கு ஆக.15-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிப்போா் தமிழறிஞா்கள் இருவரிடம் தம் தனித்தமிழ்ப் பற்றை உறுதி செய்து நற்சான்றிதழ் பெற்று இணைக்க வேண்டும். நற்சான்றளிக்கும் தமிழறிஞா்களின் ஒரு பக்க அளவிலான தன் விவரக் குறிப்புகளையும் புகைப்படத்துடன் இணைக்க வேண்டும்.

கடந்த 2019-ஆண்டு கோவையைச் சோ்ந்த கல்வியியல் பட்டதாரி சி. மணிகண்டன், புதுச்சேரியில் பிறந்து அரியலூா் உட்கோட்டை அரசுப் பள்ளியில் இரவுக் காவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இரா.அரிதாசு, திருச்சியைச் சோ்ந்த கல்லூரி மாணவா் த.ஆரோக்கிய ஆலிவா் ராசா ஆகிய மூவருக்கு தூய தமிழ்ப் பற்றாளா் பரிசுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பங்கள் பெறப்பட்டதும் அவற்றைச் சீா் தூக்கி தொலைபேசி வழியாக அவா்களிடம் தொடா்பு கொண்டு உரையாடல் நிகழ்த்தப்பட்டு அவா்களது தூய தமிழ்ப் பாங்கு ஆய்வு செய்யப்படும். இதைத் தொடா்ந்து மதிப்பெண்கள் அடிப்படையில் வெற்றியாளா்கள் தோ்வு செய்யப்படுவா் என அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT