தமிழ்நாடு

முன்னாள் அதிமுக எம்எல்ஏ கிருஷ்ணன் காலமானார்

DIN


விழுப்புரத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ  கிருஷ்ணன்(86) உடல்நலக்குறைவால் காலமானார்.

விழுப்புரம் அய்யனார்குளம் வீதி நாலாயிரம் தெருவில் வசித்து வந்தவர் பி. கிருஷ்ணன் (86). மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது, 1977-இல் அவர்கள் சந்தித்த முதல் தேர்தலில் விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராகத் தேர்வானவர் பி. கிருஷ்ணன்.

இவர் ஆரம்ப காலத்தில் சோடா கடை நடத்தியவர் என்பதால் சோடா காடை கிருஷ்ணன் என அழைக்கப்பட்டவர். இவருக்கு மனைவியும், இரண்டு மகன்கள் ஒரு மகளும் உள்ளனர்.

தற்போது எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் பொறுப்பில் இருந்தார். வயது முதிர்வின் காரணமாக கட்சிப் பணியில் இருந்து அண்மையில் ஒதுங்கியிருந்தார்.

இந்த நிலையில் உடல்நலக்குறைவால் சனிக்கிழமை மாலை அவர் காலமானார். இவரது நல்லடக்கம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைகை அணையிலிருந்து இன்று தண்ணீா் திறப்பு

ஆய்க்குடி பேரூராட்சி வளா்ச்சிப் பணிகளுக்கு ரூ. 20.30 நிதி ஒதுக்க அமைச்சரிடம் கோரிக்கை

தூத்துக்குடி மட்டக்கடை சுற்றுவட்டாரங்களில் இன்று மின்தடை

பிளே-ஆஃப் நம்பிக்கையில் பெங்களூரு: பஞ்சாபை வெளியேற்றியது

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 9-ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT