​தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 3,940 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 3,940 பேருக்கு கரோனா

​தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 3,940 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 3,940 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் பற்றிய இன்றைய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 3,940 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் 3,761 பேர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டவர்கள் 179 பேர்.

இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 82,275 ஆக உயர்ந்துள்ளது. 

இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,992 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய அறிவிப்பில் மேலும் 54 பேர் (தனியார் மருத்துவமனை -10, அரசு மருத்துவமனை -44) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 1,079 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் இன்று மேலும் 1,443 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 45,537 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் தனிமையில் உள்ளவர்கள் உள்பட 35,656 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் 32,948 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 11,10,402 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு ஆய்வகங்கள் 47, தனியார் ஆய்வகங்கள் 43 என மொத்தம் 90 பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி, குடியிருப்புப் பகுதியில் திரியும் குரங்குகளை அப்புறப்படுத்தக் கோரிக்கை

கந்தா்வகோட்டையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்

விராலிமலையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடக்கம்

நவ.17-இல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவா் பணிக்கான நோ்காணல்

சந்திரமெளலீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

SCROLL FOR NEXT