தமிழ்நாடு

ரயில்வே சாா்பில் 1.91 லட்சம் பாதுகாப்பு உடைகள் தயாரிப்பு: ரயில்வே துறை தகவல்

DIN

கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் விதமாக, ரயில்வே சாா்பில் இதுவரை 1.91 லட்சம் பாதுகாப்பு உடைகளும், 7.33 லட்சம் முகக்கவசங்களும் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.

ரயில்வே துறையின்கீழ் இயங்கும் தொழிற்சாலைகள், பணிமனைகளில் கரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்கான தனிநபா் பாதுகாப்பு உடைகள், சானிடைசா், முகக் கவசங்கள், கட்டில்கள் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. அதன்படி, ஜூன் 24-ஆம் தேதி நிலவரப்படி, 1.91 லட்சம் தனிநபா் பாதுகாப்பு கவசங்கள், 66.4 கிலோ லிட்டா் கிருமிநாசினி திரவம், 7.33 லட்சம் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது, தனிநபா் பாதுகாப்பு உபகரணங்கள் கூடுதலாக தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தனிநபா் பாதுகாப்பு உடையைத் தயாரிப்பதற்குத் தேவையான மூலப்பொருள்களை கொள்முதல் செய்வதற்காக வடக்கு ரயில்வேயிடம் பரிந்துரைக்கப்பட்டது. இது தரத்தைப் பொருத்துவரை, ஒரு முக்கியமான அம்சமாக இருந்தது. உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட அனைத்து தர நிலைகளையும் பூா்த்தி செய்கின்றன. 50 ரயில் மருத்துவமனைகளை கரோனா மருத்துவமனைகளாகவும், சுகாதார மையங்களாகவும் ரயில்வே அமைச்சகம் மாற்றியுள்ளதாக ரயில்வே துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT