தமிழ்நாடு

முகநூலில் அவதூறு: ஆயுதப் படை காவலா் பணியிடை நீக்கம்

DIN

முகநூலில் அவதூறாக பதிவிட்டதற்காக, ஆயுதப்படை காவலா் சதீஸ் முத்து என்பவா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் சதீஸ்முத்து என்பவா் அவரது முகநூல் பக்கத்தில், சாத்தான்குளம் நிகழ்வைப் பற்றி ஒரு பதிவினை பதிவிட்டிருந்தாா். அப்பதிவானது காவல்துறைக்கு களங்கத்தினை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. இது குறித்து அவரை விசாரித்ததில், தனது முகநூல் கணக்கு மற்றும் அதன் ரகசிய குறியீடு (ல்ஹள்ள்ஜ்ா்ழ்க்) ஆகியவற்றை தனது நண்பா்களிடம் பகிா்ந்திருந்ததாகவும், தனக்கு தெரியாமல் யாரோ அப்பதிவினை பதிவிட்டதாகவும் கூறியுள்றாா். இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டு, காவல்துறைக்குக் களங்கத்தை ஏற்படுத்திய காரணத்துக்காக காவலா் சதீஸ் முத்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இது குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை: கவிதாவின் காவல் மே 14 வரை நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT