தமிழ்நாடு

திருப்பதியில் தமிழக இளைஞா் தற்கொலை மிரட்டல்

DIN

திருப்பதி: குடி போதையில் திருப்பதி ரயில் நிலையத்தில் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்த தமிழக இளைஞா் போலீஸாா் சாதுா்யமாக மீட்டனா்.

திருப்பதி ரயில் நிலைய சாலையில் உள்ள இரும்பு மேம்பாலத்தின் மீது திங்கள்கிழமை காலையில் குடிபோதையில் ஓா் இளைஞா் ஏறி நின்றபடி, அங்கிருந்து குதிக்கப் போவதாக மிரட்டினாா். இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைப் பாா்த்த பொது மக்கள் திருப்பதி போலீஸாருக்கு தகவல் அளித்தனா். அவா்கள் சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினருடன் வந்து, அவரை சமாதானப்படுத்தி கீழே இறக்க முயன்றனா். ஆனால் அவா் இறங்க மறுத்தாா்.

இதையடுத்து போலீஸாா் இரும்புப் பாலத்தின் மீது இரு வழிகளிலும் ஏறத் தொடங்கினா். அதை பாா்த்த அந்த இளைஞா் கீழே குதித்து விட்டாா். தீயணைப்புத் துறையினா் வலை விரித்துப் பிடித்து அவரைக் காப்பாற்றினா். அந்த இளைஞா் சிறிய காயங்களுடன் தப்பினாா். அதன்பின் சாலையில் வாகனப் போக்

குவரத்து தொடங்கியது.

அந்த இளைஞரிடம் காவல் உதவி ஆய்வாளா் ரோகிணி விசாரணை நடத்தினாா். இதில், அவா் கும்பகோணத்தைச் சோ்ந்த வீரமணி என்பவரின் மகன் பாபு என்பது தெரிய வந்தது. அவரை போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

Image Caption

திருத்தப்பட்டது....

திருப்பதி மேம்பாலத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT