தமிழ்நாடு

என்பிஆர் தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதித்தோம்: ரஜினி சந்திப்பு குறித்து கே.எம்.பக்வி பேட்டி

DIN

ரஜினிகாந்தை சந்தித்து என்பிஆர் தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதித்ததாக தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் கே.எம்.பக்வி தெரிவித்தார்.

சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை இஸ்லாமிய மதகுருமார்கள் சந்தித்து ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினர்.

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் ரஜினிகாந்தை சந்தித்தனர். அப்போது, குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து அதிருப்தியளிப்பதாக இஸ்லாமிய மதகுருமார்கள் கூறிய நிலையில், அவரை சந்தித்து அதன் பாதிப்புகள் குறித்து விளக்கமளித்ததனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் கே.எம்.பக்வி கூறுகையில்,

எங்கள் தூதுக்குழு ரஜினிகாந்தை சந்தித்து என்பிஆர் தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதித்தது. அப்போது என்பிஆர் காரணமாக முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை நாங்கள் விளக்கினோம். அவர் எங்கள் கருத்தை புரிந்து கொண்டார். இதனால் முஸ்லிம்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை அகற்ற தேவையான அனைத்தையும் செய்து தருவதாக உறுதியளித்தார் என்று தெரிவித்தார்.

முன்னதாக, மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு இருப்பதாக நடிகா் ரஜினிகாந்தை சனிக்கிழமை சந்தித்து தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவா் அபுபக்கா் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT