காவலர் உடலைப் பார்வையிடும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் 
தமிழ்நாடு

செஞ்சி காவலர் காட்டுப்பகுதியில் தூக்கிட்டுத் தற்கொலை

செஞ்சி காவலர் பாதுகாப்புப் பணியை முடித்துச் சென்ற நிலையில், காட்டுப்பகுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

செஞ்சி காவலர் பாதுகாப்புப் பணியை முடித்துச் சென்ற நிலையில், காட்டுப்பகுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம், நடு நெல்லிமலை கிராமத்தைச் சேர்ந்த சரவணன் ( 26 ), செஞ்சி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிகிறார். இவர் பொதுத்தேர்வுப் பாதுகாப்பு பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தார். 

இந்த நிலையில், பணி முடித்துச் சென்று, செஞ்சியை அடுத்த அத்தியூர் காட்டுப்பகுதியில் திங்கள்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். காவலர் ஒருவர் காட்டுப்பகுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவலிறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், சரவணன் உடலைக் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பையை வென்றபோது என்ன செய்தீர்கள்? கௌதம் கம்பீருக்கு ஆதரவாக முன்னாள் கேப்டன்!

“திமுக என்னை அழைக்கவில்லை! ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்!” செங்கோட்டையன் பேட்டி | ADMK

ஹாங்காங்: வானுயரக் கட்டடங்களை தீக்கிரையாக்கிய மூங்கில் வலை! அடுத்து என்ன?

சூலூர் அருகே சிறுத்தை நடமாட்டம்! உடனடியாக பிடிக்க பொதுமக்கள் வேண்டுகோள்!

உருவானது டிக்வா புயல்: அதி கனமழை எச்சரிக்கை!

SCROLL FOR NEXT