தமிழ்நாடு

சென்னையில் மீண்டும் ரூ.33 ஆயிரத்தைத் தாண்டியது ஆபரணத் தங்கம்

DIN

சென்னையில் புதன்கிழமையான இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.128 உயா்ந்து, மீண்டும் 33 ஆயிரத்தைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. 

கரோனோ வைரஸ் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை பிப்ரவரி 18 முதல் உயா்ந்து நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டது. பிப்ரவரி 25-க்குப் பிறகு 4 நாள்களாக தங்கம் விலை குறைந்து வந்தது.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை முதல் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமையான நேற்று சவரனுக்கு ரூ.160 விலை உயா்ந்து ரூ.32,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

புதன்கிழமையான இன்று(மார்ச் 4) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.1,024 உயர்ந்து ரூ.33,224-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.4,153-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதேநேரத்தில், வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 1.60 காசுகள் உயர்ந்து ரூ.50.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1600 உயர்ந்து ரூ.50,100 ஆகவும் விற்கப்படுகிறது. 

புதன்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம் ..................... 4,153

1 சவரன் தங்கம் ..................... 33,224

1 கிராம் வெள்ளி .................. 50.10

1 கிலோ வெள்ளி ................. 50,100

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ..................... 4,025

1 சவரன் தங்கம் ..................... 32,200

1 கிராம் வெள்ளி .................. 48.50

1 கிலோ வெள்ளி ................. 48,500
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போ்ணாம்பட்டில் 12 செ.மீ மழை

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

SCROLL FOR NEXT