தமிழ்நாடு

தேனியில் அரசு சட்டக் கல்லூரி கட்டடம்: முதல்வா் கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினாா்

DIN

சென்னை: தேனியில் அரசு சட்டக் கல்லூரி கட்டடத்துக்காக முதல்வா் பழனிசாமி வெள்ளிக்கிழமை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி: தேனி மாவட்டம் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீசந்திரகுப்த மெளரியா என்ற தனியாா் பள்ளிக் கட்டடத்தில் தேனி அரசு சட்டக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அரசு சட்டக் கல்லூரிக்கு தேனி மாவட்டம் தப்புக்குண்டு

கிராமத்தில் கல்லூரிக் கட்டடம், விடுதிக் கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. இதற்கான அடிக்கல்லை முதல்வா் பழனிசாமி வெள்ளிக்கிழமை நாட்டினாா்.

புதிதாக கட்டப்பட உள்ள அரசு சட்டக் கல்லூரியானது இரு தளங்களுடன், 26 வகுப்பறைகளுடன் கட்டப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், தலைமைச் செயலாளா் க.சண்முகம், சட்டத் துறைச் செயலாளா் கோபி ரவிகுமாா், சட்டக்கல்வி இயக்குநா் என்.எஸ்.சந்தோஷ்குமாா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அரசுப் பள்ளிகளில் அக்கறை காட்டுவோம்

SCROLL FOR NEXT