தமிழ்நாடு

எனது கருத்தை கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு மனமார்ந்த நன்றி: ரஜினிகாந்த்

DIN

அரசியல் மாற்றம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நான் கூறிய கருத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரையில் பதிவிட்டதாவது,

அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம்
இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை
என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற,சிந்திக்கின்ற வகையில் 
கொண்டு போய் சேர்த்த 
ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

இவ்வாறு நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் பத்திரிகையாளர்களை ரஜினிகாந்த் வியாழக்கிழமை சந்தித்தார். அப்போது, நான் கட்சித் தலைவராகவே இருக்க விரும்புகிறேன். முதல்வர் பொறுப்பு எனக்கு வேண்டாம். கட்சி வேறு, ஆட்சி வேறு என்பது எனது அரசியல் கொள்கை. தமிழகத்தில் மக்கள் எழுச்சி ஏற்பட்ட பிறகே நான் அரசியலுக்கு வருவேன் என்றும், அவ்வாறு மக்கள் புரட்சி ஏற்படாமல் நான் அரசியலுக்கு வருவது என்பது தேவையில்லாதது என்று பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT