முகப்பு
தமிழ்நாடு

50 வயதைக் கடந்தவர்கள் நிமோனியா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: மருத்துவர் வி.எஸ்.நடராஜன்

முதுமையில் சளி பாதிப்பால் ஏற்படும் நோய்களை தவிர்த்துக்கொள்ள 50 வயதைக் கடந்தவர்கள், கட்டாயம் நிமோனியா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என சென்னையைச் சேர்ந்த முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன் தெரிவி

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:11 PM
பகிர்:

முதுமையில் சளி பாதிப்பால் ஏற்படும் நோய்களை தவிர்த்துக்கொள்ள 50 வயதைக் கடந்தவர்கள், கட்டாயம் நிமோனியா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என சென்னையைச் சேர்ந்த முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன் தெரிவித்தார்.

வேளாளர் கல்வி அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் காசியண்ணன் சேவை மருத்துவமனையின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் இலவச மருத்துவ முகாம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலை ஏ.இ.டி.பள்ளி அருகில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

இவ்விழாவிற்கு வேளாளர் கல்வி அறக்கட்டளை தலைவர் எஸ்.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். செயலர் எஸ்.டி.சந்திரசேகர், அம்மணியம்மாள் கல்வி அறக்கட்டளை தாளாளர் காசியண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் முதியோர் நல அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் வி.எஸ்.நடராஜன் சிறப்புரை ஆற்றினார். 

சர்க்கரை மற்றும் இருதய நோய் சிறப்பு மருத்துவர் பி.குருமூர்த்தி, காது, மூக்கு, தொண்டை நிபுணர் டி.எ.தங்கவேல், முதியோர் நல சிறப்பு மருத்துவர் எஸ்.பிரபாகரன், எலும்புமுறிவு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் எ.பிரகாஷ் ஆகியோர் பேசினர். 

முழு கட்டுரையைப் படிக்க →