முகப்பு
தமிழ்நாடு

சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை தமிழக எல்லையில் தீவிர கரோனா முன்னெச்சரிக்கை பணி

கும்மிடிப்பூண்டி அருகே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தமிழக எல்லையில் அமைந்துள்ள எளாவூர் ஏழுகிணறு பகுதியில் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில்

தமிழ்நாடு

சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை தமிழக எல்லையில் தீவிர கரோனா முன்னெச்சரிக்கை பணி

கும்மிடிப்பூண்டி அருகே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தமிழக எல்லையில் அமைந்துள்ள எளாவூர் ஏழுகிணறு பகுதியில் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில்

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:12 PM
பகிர்:

கும்மிடிப்பூண்டி அருகே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தமிழக எல்லையில் அமைந்துள்ள எளாவூர் ஏழுகிணறு பகுதியில் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் சுகாதார துறை, வருவாய் துறை, காவல் துறை இணைந்து தீவிர கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார், மாவட்ட சுகாதார பணி துணை இயக்குனர் ஜவஹர்லால் உத்தரவின் பேரில் கும்மிடிப்பூண்டி அருகே தமிழக ஆந்திர எல்லை பகுதியான எளாவூர் ஏழுகிணறு ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

அதன்படி வட்டாட்சியர் செந்தாமரைச்செல்வி, வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் மேற்பார்வையில் நடைபெறும் இந்த பணியில் நாள் ஒன்றுக்கு இரு ஷிப்ட்டுகளாக சுகாதார ஆய்வாளர், 5 சுகாதார பணியாளர்கள், 3 போலீஸார், வருவாய் துறையினர் அடங்கிய குழுவினர் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. 

மேலும் வாகனங்களில் வருவோருக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுவதோடு, அனைவருக்கும் கை கழுவும் பழக்கம் குறித்து கற்றுத் தரப்படுகிறது.

இந்த பணிகளில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகதாஸ், டாக்டர் ரேகா, சுகாதார ஆய்வாளர் முரளிகிருஷ்ணா உள்ளிட்ட சுகாதார துறையினர் 24மணி நேரமும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே போல கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் பகுதியில் தமிழக எல்லையான பொம்மாஜிகுளம் பகுதியில் சுகாதார துறையினர் தீவிர கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →