தமிழ்நாடு

தமிழகத்தில் முகக் கவசம் மற்றும் கிருமி நாசினிகள் விலை உயர்வை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?- உயர்நீதிமன்றம்

DIN

தமிழகத்தில் முகக் கவசம் மற்றும் கிருமி நாசினிகள் விலை உயர்வை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு ‘என் 95’ முகக் கவசம் அணிய வேண்டுமென நாடு முழுவதும் கடந்த இரு வாரங்களாக தீவிர விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. முக்கியமாக பயணம் மேற்கொள்ளும் போதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும்போதும் மருத்துவமனை, ரயில் நிலையங்கள், மாா்க்கெட்டுகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும்போதும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவா்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

இதன் விளைவாக, தமிழகத்தில் ‘என் 95’ முகக் கவசத்தின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் ‘என் 95’ முகக் கவசங்களுக்கு அனைத்துப் பகுதிகளிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் இந்த வகை முகக் கவசங்கள் கிடைப்பதில்லை என பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். இதனால் சில மருந்து வியாபாரிகள், இந்த வகை முகக் கவசங்களை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்று கூடுதல் லாபம் சம்பாதித்து வருகின்றனா். 

இப்படிப்பட்ட வியாபாரத்தில் ஈடுபடுகிறவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. இந்நிலையில் முகக்கவசம், கிருமி நாசினி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழகத்தில் முகக் கவசம் மற்றும் கிருமி நாசினிகள் விலை உயர்வை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? எனக் கேள்வி எழுப்பியது. 

அத்துடன் இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT