முகப்பு
தமிழ்நாடு

ஏனாமில் 144 தடை உத்தரவு

புதுவை மாநிலம் ஏனாமில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Updated On : 20 மார்ச், 2020 at 10:17 AM
பகிர்:

புதுவை மாநிலம் ஏனாமில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

புதுவை மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் என் 4 பிராந்தியங்கள் உள்ளன. இதில் புதுச்சேரியில் இருந்து காரைக்கால் 150 கி.மீ. தொலைவிலும், மாஹே 690 கி.மீ. தொலைவில் கேரள மாநிலம் கண்ணூர் அருகிலும், ஏனாம் 740 கி.மீ. தொலைவில் ஆந்திர மாநிலம் அருகே கோதாவரி ஆற்றங்கரையிலும் உள்ளன.  

இந்நிலையில் ஏனாமில் கரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க 144 தடை உத்தரவு வெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்பட்டது. அங்கு 35,000 மக்கள் வசித்து வருகின்றனர். புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவின் சொந்த தொகுதி ஏனாம் ஆகும். மாஹேவில் மூதாட்டி ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு தனி அறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Advertisement

அங்கு 30,000 மக்கள் வசித்து வருகின்றனர்.அங்கு மருத்துவக் குழு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.