தமிழ்நாடு

தேவையற்ற உள்ளூர் பயணங்களைத் தவிருங்கள்: சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

DIN


சென்னை: பொதுமக்கள் அனைவரும் தேவையற்ற உள்ளூர் பயணங்களைத் தவிர்க்குமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளைய தினம் பிரதமர் மோடி, மக்கள் ஊரடங்கு அறிவித்திருக்கிறார். எனவே காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பொதுமக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தேவையற்ற உள்ளூர் பயணங்களயும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். நாளை மார்ச் 22ம் தேதி அம்மா உணவகங்கள் தொடர்ந்து இயங்கும். ஏழை எளிய மக்கள், வெளி உணவுகளை நம்பியிருக்கும் மக்களுக்காக அம்மா உணவகங்கள் இயங்கும்.

குறுகிய நேரத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எனவே அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT