தமிழ்நாடு

தமிழக அரசு தடை உத்தரவால் தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகரிப்பு

DIN

தஞ்சாவூர்: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையையொட்டி தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால், சென்னை, கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாநகரங்களிலிருந்து திங்கள்கிழமை மாலை ஏராளமானோர் சொந்த ஊருக்குப் புறப்பட்டனர்.

தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை வரத் தொடங்கினர்.

இதனால், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. பேருந்துகளும் குறைவாக உள்ளதால் கடும் நெரிசலுக்கு இடையே பயணம் செய்தனர். ஏராளமானோர் படிக்கட்டுகளிலும் மேற்கூரையிலும் பயணம் மேற்கொண்டனர்.

மேலும், காலை முதல் பேருந்து கிடைக்காமல் காத்திருக்கும் பயணிகளும் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT