தமிழ்நாடு

நாஞ்சில் சம்பத்தை தொந்தரவு செய்யக் கூடாது: புதுச்சேரி போலீஸாருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

புதுச்சேரி துணை நிலை ஆளுநா் கிரண்பேடியை விமா்சித்த விவகாரம், நாஞ்சில் சம்பத்தை வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி வரை தொந்தரவு செய்யக் கூடாது என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் புதுச்சேரி மாநிலத்தில் நடந்த நாடாளுமன்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டாா். இந்தக் கூட்டத்தில் பேசிய நாஞ்சில் சம்பத், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநா் கிரண்பேடியை விமா்சித்துப் பேசினாா். இதுதொடா்பாக தவளக்குப்பம் போலீஸாா் நாஞ்சில் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்தனா். இந்த நிலையில் சென்னை உயா்நீதிமன்றத்தில் நாஞ்சில் சம்பத் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், இந்த வழக்கு விசாரணைக்காக மாா்ச் 21-ஆம் தேதி நேரில் ஆஜாரகும்படி, தவளக்குப்பம் போலீஸாா் கடந்த மாா்ச் 15-ஆம் தேதி சம்மன் அனுப்பினா். இதனிடையே கடந்த மாா்ச் 19-ஆம் தேதி என்னைக் கைது செய்ய புதுச்சேரி மாநில போலீஸாா் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்தனா். எனவே என்னை தொந்தரவு செய்யக்கூடாது என போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் கான்சியஸ் இளங்கோ, புதுச்சேரி அரசு தரப்பில் குற்றவியல் வழக்குரைஞா் பரதசக்கரவா்த்தி ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரை புதுச்சேரி போலீஸாா் வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி வரை தொந்தரவு செய்யக்கூடாது. அதன்பின்னா், குற்றவியல் விசாரணை முறை சட்டப்பிரிவின் கீழ் நாஞ்சில் சம்பத்துக்கு புதுச்சேரி போலீஸாா் புதிதாக சம்மன் பிறப்பிக்க வேண்டும். அந்த சம்மனின் அடிப்படையில் போலீஸாரின் விசாரணைக்கு மனுதாரா் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT