தமிழ்நாடு

ஈரோட்டில் 48 பேர் வீடுகளில் கண்காணிப்பில் உள்ளனர்: மாவட்ட ஆட்சியர் கதிரவன்

DIN

ஈரோட்டில் 48 பேர் வீடுகளில் கண்காணிப்பில் உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனோ வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் அரசு துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது, பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனோ வைரஸ்-க்கு என தனி மருத்துவ மனையாக செயல்பட உள்ளது. தற்போது வரை போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளனர் தேவைப்பட்டால் ஐ.எம்.ஏ மூலம் அனுப்பட உள்ளனர்.

தற்போது வரை ஈரோடு மாவட்டத்தில் 15 பேர் கரோனோ வைரஸ் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மேலும் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த 125 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் இன்னும் 39 பேர் மட்டும் உள்ளனர். 

48 நபர்களை வீடுகளில் கண்காணிப்பில் உள்ளனர். ஏற்கனவே கரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்த பகுதிகளில் உள்ள 695 பேருக்கு கரோனோ அடையாள படுத்தி அவர்களுக்கு வீடுகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் மட்டுமே மற்ற மாவட்டங்களை சேர்ந்த கரோனோ தொற்று உள்ளவர்கள் பெருந்துறை கரோனோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும். மாவட்டத்தில் கரோனோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் தேவையில்லாமல் வீடுகளில் இருந்து வெளி வருவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT