தமிழ்நாடு

புதுச்சேரியில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்

DIN

புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆல் பாஸ் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

உலகளவில் கரோனா வைரஸ் தொற்று பரவி நாளுக்கு நாள் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. சர்வதேச நாடுகளிலும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

இந்நிலையில், புதுச்சேரியில் கரோனா நோய்த் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மேலும், மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் அடுத்த 21 நாட்கள் வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அரசின் உத்தரவை மீறுபவர்களுக்கு ஓராண்டு தண்டனை விதிக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. 

மேலும், கரோனா எச்சரிக்கையை முன்னிட்டு புதுவை பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வை வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால்,  1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாகப் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

குஜராத், உத்தரப்பிரதேச மாநிலம் அறிவித்ததைத் தொடர்ந்து புதுச்சேரி அரசும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT