தமிழ்நாடு

பொதுமக்கள் வெளியே வந்தால் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை: சந்தீப் நந்தூரி பேட்டி 

DIN


தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தேவை இல்லாமல் பொதுமக்கள் வெளியே வந்தால் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி பேட்டி

கரோனா வைரஸ்  பயன்படுத்தி முக கவசம்  கிருமிநாசினி ஆயில்  அதிக விலைக்கு சந்தையில்  விற்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கு தட்டுப்பாடும் நிலவுகிறது.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் மகளிர் குழு சார்பில் மாவட்டத்தில் 14 மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குறைந்த விலையில் முககவசம் மற்றும் கிருமி நாசினி ஆயில்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த மகளிர் சுய உதவிக்குழு கடையை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைத்தார்.

இதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம். இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் வெளியில் தெரிந்தால் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கரோனா வைரஸ் இல்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT