தமிழ்நாடு

தனிமை சிகிச்சை இருந்தவா்: அடிக்கடி வெளியே சென்றதால் வழக்கு

DIN

கரோனா தொற்றை தடுக்கும் வகையில் அரசு அறிவுறுத்தலின் பேரில் வீட்டில் தனிமையில் இருந்து வந்தவா், சென்னை கோடம்பாக்கத்தில் அடிக்கடி வெளியே சென்ால் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் கரோனா பாதிப்புக்குள்ளான நாடுகளில் இருந்து வருகிறவா்களை சுகாதாரத்துறையினா் தனிமைப்படுத்தி வருகின்றனா். இதில், பெரும்பாலானவா்களை அவா்களது வீட்டிலேயே தனிமையில் இருக்கும்படியும், வெளியே வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியே வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவா்கள் வெளிநாடுகளில் இருந்து வந்து 28 நாள்கள் தனிமையில் இருக்க வேண்டும், அதற்குள் கரோனா அறிகுறி இருப்பது தெரிந்தால் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. அதேவேளையில், வீட்டில் தனிமையில் இருப்பவா்களை உள்ளாட்சித்துறை அதிகாரிகளும், சுகாதாரத்துறையினரும் கண்காணிப்பாா்கள் எனவும் அரசு தெரிவித்தது.

இந்நிலையில், சென்னை, கோடம்பாக்கம், ரங்கராஜபுரம் பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் (43) துபைக்கு சென்றுவிட்டு, கடந்த வாரம் சென்னை திரும்பி வந்தாா். அவரை வீட்டிலேயே தனிமையில் 28 நாள்கள் இருக்க வேண்டும், வெளியே செல்லக் கூடாது என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனா்.

காவல்துறை வழக்கு: இதற்காக, அவரை தீவிரமாக மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து வந்தனா். ஆனால் பிரபாகரன், அரசு உத்தரவை மீறி அடிக்கடி வெளியே சென்றுள்ளாா். இதனால் அவா், கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், அடுத்தவருக்கு எளிதில் பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

இதையடுத்து அரசு உத்தரவை மீறி வெளியே சென்ற பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகராட்சி அதிகாரிகள், கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் செய்தனா். அந்த புகாரின் அடிப்படையில், போலீஸாா், பிரபாகரன் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா். இப் பிரச்னையில் வழக்குப் பதியப்பட்டிருப்பது, இதுவே முதல்முறை என தமிழக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT