முகப்பு
தமிழ்நாடு

ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா பரிசோதனை மையம்: ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தகவல்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்களக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் பரிசோதனை முகாம் அமைக்க தமிழக முதல்வர் அனுமதியளித்துள்ளார்.

தமிழ்நாடு

ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா பரிசோதனை மையம்: ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தகவல்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்களக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் பரிசோதனை முகாம் அமைக்க தமிழக முதல்வர் அனுமதியளித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:17 PM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்களக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் பரிசோதனை முகாம் அமைக்க தமிழக முதல்வர் அனுமதியளித்துள்ளார். விரைவில் பரிசோதனை முகாம் தொடங்கப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். சிதம்பரம் நகராட்சி சார்பில் மேலரதவீதியில் கிருமிநாசினி மூலம் சாலைகளை சுத்தப்படுத்துவதை ஆட்சியர் பார்வையிட்டார். 

மேலும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ள சிறப்பு பிரிவை பார்வையிட்டு, ஏற்படுத்தப்பட்டுள்ள மருத்துவ வசதி குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் கேட்டறிந்தார். பின்னர் சிதம்பரம் அம்மா உணவகத்தை பார்வையிட்டு, அங்குள்ள மக்களுக்கு உணவு வழங்கி ஆறுதல் தெரிவித்தார். மேலும் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி கடைகளை ஆட்சியர் தொடங்கி வைத்தார். 

ஆட்சியருடன் சிதம்பரம் உதவி ஆட்சியர் விசுமகாஜன், டிஎஸ்பி எஸ்.கார்த்திகேயன், நகராட்சி ஆணையாளர் பி.வி,சுரேந்திரஷா. பல்கலைக்கழக பதிவாளர் என்.கிருஷ்ணமோகன், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் யு.வி.சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடையே தெரிவித்தது: கடலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. 

பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்த்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்து உறுதுணையாக இருக்க வேண்டும். கடலூர் மாவட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து வந்த நபர்கள் மற்றும் சுற்று புறத்தில் கரோனா அறிகுறி ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவருடன் கூடிய கட்டுப்பாட்டு அறை எண் 1077-ற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் அனைத்து நகராட்சி, பேருராட்சி, ஊராட்சி பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

கரோனா வைரஸ் நோயால் கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எவரும் இல்லை. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 440 படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை பிரிவு தயார் நிலையில் உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கரோனா வைரஸ் நோய் குறித்த பரிசோதனை மையம் அமைக்க தமிழக முதல்வர் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

அதற்குண்டான உபகரணங்க வாங்க நிதி ஒதுக்கியுள்ளார். விரைவில் பரிசோதனை மையம் அமைக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →